Saturday, September 16, 2017

கோழியினங்களுக்கான நோய் தடுப்பு மருந்து.

லசோட்டா பயன்படுத்தும் முறை:

லசோட்டா மருந்து..
வெட்ரினரி மருந்தகங்களில் கோழிகளுக்கான தனிப் பிரிவு கோழிகள் நோய் தடுப்பு பிரிவில் மட்டுமே கிடைக்கும்.
ONLINE JOBS FROM HOME USING MOBILE
லசோட்டா வாங்கும் இடத்தில் இரணடு மருந்து பாட்டில்கள் குளிர்சாதண பெட்டியில் இருந்து எடுத்து அதனுடன் இரண்டு ஐஸ் பேக்கேஜ் கட்டிகளுடன் தருவாா்கள்.

அந்த ஐஸ் பேக் கட்டிகளுக்கு நடுவே இந்த இரண்டு பாட்டில்களையும் வைத்து தருவாா்கள்.

ஒரு பாட்டிலில் மருந்து(liquid),இன்னொரு பாட்டிலில் மாத்திரை போன்ற வடிவில் சிறிய கட்டி இருக்கும்.

அத்துடன் சொட்டு மருந்து விடுவதற்கான drops handler ம் தருவாங்க.

சொட்டு மருந்து போடும் வரையில் மருந்து பாட்டில்கள் இரண்டும் ஐஸ் கட்டிகளுக்கு நடுவே தான் இருக்கனும்.

கோழிகளை எல்லாம் பிடித்து நம் கைவசம் வைத்த பின்பு,Liquid bottle ல் Needle உடன் கொண்ட Syringeஐ liquid bottle ல் உள்ள liquid medicine-ஐ அடுத்து இருக்கும் மாத்திரை வடிவில் இருக்கும் சிறிய பாட்டிலில் அந்த liquid -ஐ விட்டால் அந்த மாத்திரை வடிவில் உள்ள மருந்து கரைந்து விடும் அதற்க்கு பின்பு இந்த சின்ன பாட்டிலில் இருக்கும் மருந்தினை ஏற்கனவே liquid இருக்கும் பாட்டிலில் ஒன்றாக கலந்து குலுக்கி கொள்ளவும்.
Earn Money From Home
அதற்கு பின்பு Drops handler ல் Syringe மூலமாக ஊற்றி drops handler ஐ நிரப்பிக்கொள்ளவும்.

அரைகிலோ எடை கொண்ட கோழிகளுக்கு ஒரு கண்ணில் மட்டும் ஒரே ஒரு சொட்டு விடவும்..

1 கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள கோழிகளுக்கு இரண்டு கண்களிலும் ஒரு கண்ணிற்கு ஒரு சொட்டு வீதம் இரு"கண்களிலும் இரண்டு சொட்டுகள் மட்டுமே விடவேண்டும்.

அதிகம் சொட்டுகள் விடக்கூடாது..
மீறியும் விட்டால் கோழிகளுக்கு வளிப்பு வந்து விடும் கால் இழுத்துக் கொள்ளும்.

1/2கிலோ  கோழிகளுக்கு 🐓 ஒரு கண்ணில் மட்டும் ஒரு சொட்டு மட்டும் விட வேண்டும்.

1 கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள கோழிகளுக்கு ஒரு கண்ணில் ஒரு சொட்டு வீதம் இரண்டு கண்களிலும் இரண்டு சொட்டுகள் விட வேண்டும்.

குறிப்பு:மருந்தினை பிரித்து விட்டால் 3 மணி நேரத்திற்குள் பயன் படுத்தி விட்டு மீத முள்ள மருந்தினை தூக்கி போட்டு விட வேண்டும்.

அளவுக்கு அதிகமான சொட்டுகளை விடக்கூடாது..

ஒரு கண்ணுக்கு ஒரு சொட்டு தான் அளவு.

மருந்தினை பயன்படுத்தும் வரை குளிரூட்டமாக ஐஸ் கட்டியிலயே வைத்திருக்கனும்.

இதை  (once  used the medicine throwaway the balance) .
உபயோகித்ததும் மீதமுள்ள மருந்தினை தூக்கிப்போட்டு விடனும்..

1 comment:

  1. விசம் சாப்பிட்ட கோழிகளுக்கு எந்த மாதிரியான முதலுதவி மருத்துவம் செய்யலாம்...

    ReplyDelete