Friday, July 15, 2011

வெள்ளாடு வளர்ப்பு

மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் வளர்க்கலாம். வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. நிலமற்ற மற்றும் குறுநில ஏழை விவசாயிகளுக்கு வாழ்வுக்கு சிறந்த வழிகாட்டியான ஆடுகள் அதிக ஊட்டச்சத்துள்ள பாலை வழங்குகின்றன. வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச்செடிகளில் மேயும். அசாதாரமாண தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக்கூடியது.

Home Based Online Jobs

பொதுவாக நம் நாட்டு இனமான கன்னி ஆடுகள் மற்றும் தலச்சேரி ஜமுனாபாரி ஆடுகள் வளர்க்கபடுகின்றன. இந்த தலைச்சேரி ரகமானது மாதத்திற்கு 4 கிலோ அளவிற்குத் தான் வளரும்.ஆனால் தென்னாப்பிரிக்க இனமான போயர் மாதத்திற்கு 8 கிலோ அளவிற்கு வளரும்.போயர் இன தாய் ஆடுகளை வேறு பன்னையிலிருந்து வாங்கி இன்ப்பெருக்கம் செய்துகொள்ளலாம்.ஆனால் இவற்றின் விலை மிக் அதிகம் ஒரு ஜோடி ஆடுகள் ரூ 50000 முதல் 60000 வரை உள்ளது.எனவே நாம் நம் நாட்டு பெட்டை ஆடுகளை மட்டும் வாங்கவேண்டும்.இந்த ஆடுகளுக்கு போயர் இன ஆடுகளின் உறைவிந்து மூலம் செயர்க்கை முறையில் கருவூட்டல் செய்யவேண்டும்.இவ்வாறு கிடைக்கும் குட்டிகள் அதிக உடல் எடையுடனும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கும்.இவ்வாறு கிடைக்கும் குட்டிகள் சராசரியாக மாதத்திற்க்கு 6 கிலோ எடை அதிகரிக்கும்.
செயர்க்கை கருவூட்டல்

செயர்க்கை கருவூட்டல் செய்வதற்க்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை செல்லலாம் அல்லது.பயிற்ச்சிபெற்ற மருத்துவர்களை கொண்டு நமது பன்னையிலேயே செய்யலாம். போயர் இன ஆடுகளின் உறைவிந்து பெல்லட் வடிவில் உள்ளது அது பற்றி மேலும் அறிய இங்கே செல்லவும்

ஆடு வளர்ப்பில் 60 நாட்களுக்கொரு முறை குடற்புழு நீக்கம் செய்வது மிகவும் முதன்மையானது. வாய் வழியே பூச்சி மருந்து கொடுத்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குடற்புழு நீக்கம் செய்யவில்லை என்றால் ஆடுகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.