Saturday, September 16, 2017



பசு மாட்டுக்கும், ஆட்டுக்கும் மழைக்காலத்தில் நோய் வந்தால் என்ன மாதிரியான கை வைத்திய முறையை கையாளலாம்?

பதில் :

மழைக்காலத்தில் கழிச்சல், வாய் கோணாய், கால் கோமாரி, வாய் கோமாரி வந்தால் பூவன்பழம் 3- 4 பழத்தை விளக்னெண்ணெய் அல்லது தோங்காய் பூ வை வெல்லம் கலந்து வாயில் கொடுத்து விடலாம். காலில் குளம்பில் புண் இருந்தால் வேப்பண் கொழுந்து, கல் உப்பு, மஞ்சளை சேர்த்து அரைத்து, மாட்டின் காலை நான்கு கழுவி தேய்த்து விட வேண்டும்.மழைக்காலத்திற்கு முன்பாகவே, உரிய தடுப்பூசி போடுவது நல்லது. நோய் வந்த பின்பு, எக்காரணத்தைக் கொண்டு தடுப்பூசி போடுவதை தவிர்க்கவும்.

கேள்வி :

மாட்டுக்கு வாயில் அடிக்கடி கொப்புளங்கள் வருகின்றன? இவற்றை எவ்வாறு தடுப்பது?

பதில் :

கேரம்போர்ட்டிற்கு போடும் போரிக் பவுடர் மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. அந்த பவுடரை வாங்கி தேங்காய் எண்ணெய்யில் குழப்பி தேய்த்து விடவும். பின்னர், வேப்பம் கொழுந்து, மஞ்சள், கல் உப்பை நன்கு அரைத்து கொப்புளங்கள் உள்ள இடங்களில் தடவி விடுங்கள். இதைப்போல் காலில் இருந்தாலும் தடவி விடுங்கள். விரைவில் குணமாகிவிடும்.

கேள்வி :

ஆறு மாத கன்று குட்டிக்கு அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது? எப்படி நடுக்கத்தை நிறுத்துவது?

பதில் :

பாண்டிகைண்ட் என்ற மருந்து இருந்து இருக்கிறது. ஒரு மருந்தை வாங்கி அதில் பாதியை ஒரு நாளைக்கு ஒரு தடவை கொடுத்து விடுங்கள். மீதி இருப்பதை பதினைந்து நாளுக்கு பின்னர் கொடுக்கவும். தீவனம் நல்ல கொடுங்கள். ஒரு மாதத்துக்கு ஒரு முறை கொடுங்கள்.

கேள்வி :

ஜெர்சி மாடுகளை வாங்கி இருக்கிறோம். இவைகள் சரியான சமயத்தில் சினை பிடிக்க மாட்டேன் என்கிறது? கன்று போட்டு எப்போது சினை ஊசி போட வேண்டும்?

பதில் :

பொதுவாக மாடு கன்று ஈன்று 45 நாட்களில் ஈத்து அடிக்கும். அப்போது சினை ஊசி போடாமல், அதன் பின்பு, 21 நாள் கழித்து ஈத்து அடிக்கும். அந்த சமயத்தில் சினை ஊசி போட வேண்டும். இப்படி சினை ஊசி போடும் போது சினை பிடிக்கவில்லை என்றால், கால்நடை மருந்துக்கடையில் கிடைக்கும் பண்டிகைன் அல்லது பொண்டிகைன்ட் மாத்திரை ஒன்றை வாங்கிக் கொடுங்கள். ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளிக்கு பின்னர், தினமும் ஒரு கோழிமுட்டையை தினமும் ஓட்டோடு கொடுங்கள். பதினைந்து நாளைக்கு கொடுங்கள். அதன் பின்பு ஈத்து அடிக்கும். அப்போது சினை ஊசி போடுங்கள்.

இன்னொரு விஷயத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். கன்றுக்குட்டி பிறந்த இரண்டு மாதத்தில் குடல் புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாடு அல்லது கன்றுக்குட்டிக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடல் புழு நீக்கம் செய்வது நல்லது. கன்றுகுட்டி வளர்ந்த 15 – 18 மாதத்தில் ஈத்து அடிக்க ஆரம்பிக்கும். முதல் ஈத்திற்கு பிறகு, இரண்டாவது மூன்றாவது ஈத்தின் போது சினை ஊசி போடுவது நல்லது.

கேள்வி :

மூன்று மாதங்களுக்கு முன்பு மாடு கன்று ஈன்றது. முதல் இரண்டு மாதமாக 5-6 லிட்டர் பால் கொடுத்தது. தற்போது பால் மிகவும் குறைந்து 3 லிட்டர் தான் கிடைக்கிறது. மூச்சு வாங்குகிறது. என்ன செய்ய வேண்டும்?

பதில் :

இதுவரை மாட்டுக்கு குடல் புழு நீக்கம் செய்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உடனே, குடல் புழு நீக்கம் செய்யுங்கள். இதற்கு, கால்நடை மருந்துக்கடைகளில் கிடைக்கும் பாண்டிகைன்ட் என்ற மாத்திரை ஒன்றை வாங்கி மாட்டுக்கு கொடுத்துவிடுங்கள். இந்த மாத்திரையை வாழைப்பழத்தையில் அல்லது வெல்லத்தில் வைத்துக் கொடுங்கள். பின்பு, மருந்துக்கடைகளில் 5 லிட்டராகவோ அல்லது 1 லிட்டர் பாட்டிலாகவோ கிடைக்கும் கால்சிமஸ்து என்ற திரவ மருந்துவை வாங்கி தினமும் 100 மில்லி என்ற அளவுக்கு கொடுங்கள். இவ்வாறு கொடுக்கும் போது ஒரளவு பால் கூடுதலாக கிடைக்கும்.

நீங்கள் கறுப்பு- வெள்ளை இன வெளிநாட்டு ரக மாட்டினை வளர்க்கும் போது வெயில் காலத்தில் அல்லது வெயிலில் இருக்கும் போது மூச்சு இரைப்பு இருக்கும். தினமும் காலையில் 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி விடுங்கள். பசும்புல் கிடைத்தால் அதை போடுங்கள். கோ 3 கோ 4 தீவன புல் கிடைத்தால் வாங்கி போடவும். கிளட்டீரியா, சுபா புல் போன்றவற்றை வளர்க்கலாம்.
11/09/2017, 1:07 pm - ‪+965 508 25111‬: கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 18

கேள்வி :

பசு எத்தனை வகைகள் இருக்கின்றன? 24 வகைகள் இருக்கிறதா சொல்கிறார்களே உண்மையா? இறக்குமதி செய்யும் மாட்டிற்கும், நாட்டு மாட்டுக்கும் என்ன வித்தியாசம்?

பதில் :

மாட்டு வகைகள் 24 வகைகளுக்கு அதிகமாகவே இருக்கின்றன. இறக்குமதியாகும் மாடுகள் நம்ம நாட்டின் தட்பவெப்பநிலைக்கு வரும்போது தடுப்பு சக்தி குறைந்து விடுகின்றன. இதனால் தான் நாம் இறக்குமதி மாட்டு இனத்தை வளர்க்கும் போது மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டி இருக்கிறது. வெளிநாட்டு மாட்டு இனங்கள் இங்கு வந்து தாக்குபிடிக்கும் சக்தியும் குறையும். மேலும், எந்தவிதமான நோய் தாக்குதலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள அடிக்கடி தடுப்பூசி போட வேண்டியும் இருக்கு. ஹெச் எப்  கருப்பு வெள்ளை மாடுகள்  வளர்க்கும் போது மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். வெயில் காலத்தில் மூச்சு வாங்கும். மேலும் பால் குறைந்து விடும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். தீவனம் அதிகளவில் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலைக்கு ஜெர்சி மாடுதான் சரியானவை.

கேள்வி :

நான் வளர்க்கும் மாட்டுக்கு மூன்று வருடமாக சினை பிடிக்க மாட்டேன் என்கிறது? மாட்டை விற்று விடலாமா? வைத்துக் கொள்ளலாமா?

பதில் :

ஆறு வயதாகியும் இன்னும் கன்று போடவில்லை என்றால் வருத்தமாகத்தான் இருக்கிறது. இதுவரை பலவிதமான வைத்தியமும் செய்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் குடல்புழு நீக்கம் செய்யவில்லை என்கிற போது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. கால்நடை மருந்து விற்பனை செய்யும் கடையில் விற்பனையாகும் பாணக்கியூர் என்ற மாத்திரையை வாங்கி கொடுங்கள். ஒன்றிரண்டு நாட்கள் கழித்து, கோழிமுட்டையை ஒட்டுடன் தினமும் ஒன்று விதம் முப்பது நாளைக்கு தொடர்ந்து கொடுத்து வாருங்கள். அதன் பின்பு ஈத்து அடிக்கும். அப்படி இல்லை என்றால் மீண்டும் கூப்பிடுங்கள். மேற்சொன்ன மாத்திரை கிடைக்கவில்லை என்றால் பாண்டிகைண்ட் என்ற மாத்திரையை வாங்கிக் கொடுங்கள்.



மாடுகள் சினைப்பருவத்திற்கு வருவதற்கு செய்யவேண்டிய வழிமுறைகள் :

கால்நடைகளுக்கு சினைத்தருண அறிகுறி தெரியாமல் இருந்தாலும், சினைப்பருவருவத்திற்கு வருவதற்கு செய்யவேண்டியவை :

* முதல் நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு சோற்றுக்கற்றாழை மடல் ஒன்றை எடுத்து தோல் நீக்கி உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.

* அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு 1 கைப்பிடி முருங்கை இலை கொடுக்கவேண்டும்.

* அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி பிரண்டையை அரைத்து பனைவெல்லம் தொட்டு உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.

* அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து உள்ளுக்குள் கொடுக்கவேண்டும்.
PART TIME JOBS AT YOUR HOME
இப்படி 16 நாளைக்கு தினமும் ஒவ்வொரு பொருள்களை கொடுத்துவந்தால் அடுத்த சில தினங்களிலேயே மாடுகள் சினைப்பருவத்திற்கு வந்துவிடும். சினைப்பருவத்திற்கு வந்த மாடுகளை உடன் காளையுடன் சேருங்கள் அல்லது செயற்கை கருவூட்டல் செய்து பயன்பெறலாம்

No comments:

Post a Comment