வண்ண மீன் வளர்ப்பு
மிகக்
குறைந்த முதலீட்டில், மிகக் குறைந்த இடத்தில்
வண்ண மீன்களை வளர்க்கலாம். முப்பதாயிரம்
ரூபாயும் ஒரு சென்ட் இடமும்
இருந்தால் இந்தத் தொழிலில் இறங்கிவிடலாம்.
பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழில்
இது! மணிக்கணக்கில் உழைக்க வேண்டும் என்கிற
அவசியம் இல்லை. காலையில் இரண்டு
மணி நேரம், மாலையில் இரண்டு
மணி நேரம் என்று ஒரு
நாளைக்கு நான்கு மணி நேரம்
உழைத்தால் போதும், ஒருவர் மாதத்துக்கு
ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதிக்கலாம்”
வண்ண
மீன் வளர்ப்புத் தொழிலில் இருக்கும் வருமானம் மிகமிக அதிகம். ஆனால்,
அதற்கேற்ற அளவுக்கு இங்கு இந்தத் தொழில்
வளராமல் இருப்பதற்குக் காரணம் மக்களிடம் சரியான
விழிப்பு உணர்வு இல்லாததுதான். இன்றைய
நிலையில் நமக்குத் தேவையான அளவில் சுமார்
70 சதவிகிதத்தை மட்டுமே நம்மால் உற்பத்தி
செய்ய முடிகிறது.
அடுத்து
நல்ல தண்ணீர் வசதி. பூமியிலிருந்து
எடுக்கப்படும் நல்ல தண்ணீரைக் கொண்டு
வண்ண மீன்களை வளர்க்கலாம். வண்ண
மீன்களை வளர்ப்பதாக இருந்தால் நீங்கள் மீன் வளர்க்க
நினைக்கும் இடத்தில் கிடைக்குமம் ஆராய்ந்து பார்த்து தண்ணீரின் தன்மைக்கேற்ப மீன்களை வளர்க்கலாம்..
Online Part Time Jobs
Online Part Time Jobs
”இந்த
மீன்களை ”தமிழ்நாடு மீன்வளத் துறையிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது வண்ண மீன்களை
விற்கிறவர்களிடமிருந்தும் வாங்கிக்கொள்ளலாம். வண்ண மீன்களை வளர்க்கிறவர்கள்
எல்லா வகையான மீன்களையும் வளர்க்கவேண்டிய
அவசியம் இல்லை. மார்க்கெட்டில் டிமாண்ட்
இருக்கும் 2, 3 வகை மீன்களை மட்டும்
தேர்வு செய்து வளர்க்கலாம்””இது
மிக எளிமையானது. சிறிய அளவில் செய்ய
நினைப்பவர்கள் கிணற்று உறையினால் தொட்டிகளைக்
கட்டி, மீன்களை உற்பத்தி செய்ய
ஆரம்பித்துவிடலாம்.
வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு நிச்சயமாக வண்ணமீன் வளமான வாழ்க்கையைக் கொடுக்கும்
No comments:
Post a Comment